ஜனாதிபதியையும் பேராயரையும் தேடிச் சென்று சாட்சியங்கள் பதிவு! – இப்படித் தீர்மானித்திருக்கின்றதாம் தெரிவுக்குழு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் சாட்சியங்களைப் பெறத் தீர்மானித்துள்ளது எனத் தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியையும் பேராயரையும் தெரிவுக்குழுவின் அமர்வு நடைபெறும் நாடாளுமன்ற அலுவலகத்துக்கு அழைக்காமல், நேரடியாக அவர்களை அவர்களது இடத்துக்குத் தேடிச் சென்று தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சியத்தைப் பெறத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

