LocalNorth

நெல்லியடி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி, நெல்லியடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல்லியடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நவிண்டில் பகுதியைச் சோ்ந்த முகுந்தன் கிஷாந்தன் என்ற 19 வயதுடைய இளைஞரே இதன்போது உயிாிழந்துள்ளாா்.

இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நெல்லியடிப் பொலிஸார், டிப்பர் வாகனத்தின் சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading