Local

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு!

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல், மோசடி ஆகியவற்றை ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய, இதன் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி வரை இதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதியிலிருந்து 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜனவரி மாதம் 16ஆம் திகதி இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading