Lead NewsLocal

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் அவசியம்! – 17 நாடுகளிடம் உறவினர்கள் கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கின் 8 எட்டு மாவட்டங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் 17 வெளிநாட்டுத் தூதரகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கையளித்துள்ளனர்.

உள்நாட்டுப் போர் இடம்பெற்றபோது வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மகஜர் பிரிட்டன், கனடா, ஜேர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாட்டுப் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading