மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்வுள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாகக் கலந்துரையாடுவதற்கே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறினார்.
