Lead NewsLocal

மைத்திரியின் விருப்பத்துக்கு ஆட முடியாது! பெரும்பான்மையுள்ள ரணில்தான் பிரதமர்!! – ஐ.தே.க. நாடாளுமன்றக் குழு தீர்மானம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, ஒரு நபரைத் திருப்திப்படுத்துவதற்காக, அரசமைப்பை முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, களுத்துறையில் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, “நாட்டின் பிரதமரை தீர்மானிப்பது நாடாளுமன்றமே தவிர ஜனாதிபதி அல்ல” என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading