Cinema

அந்தரங்கப் புகைப்படங்களை கணவர் வெளியிட்டதால் நடிகை ‘விவாகரத்து’

வெயில் படம் மூலமாக தமிழுக்கு வந்தவர் நடிகை பிரியங்கா நாயர். மலையாள சினிமாவைச் சேர்ந்த இவருக்கு சொந்த ஊரில் இரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்.

தொலைபேசி, செங்காத்து பூமியிலே என சில படங்களில் நடித்து வந்த இவர் இயக்குநர் லாரன்ஸ் ராம் என்பவரை கடந்த 2012இல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின் சென்னையில் இருவரும் வாழ்ந்து வந்தனர். பிரியங்கா கர்ப்பம் அடைந்த பின் பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டுக்குச் சென்றார்.

அதன் பின் அவர் சென்னைக்குத் திரும்பவே இல்லையாம். 2013இல் முகுந்த் ராம் என்ற குழந்தையும் பிறந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2015இல் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கணவருக்கு எதிராக 4 வழக்குகளைப் பதிவு செய்திருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ள பிரியங்கா, தான் ஏன் விவாகரத்து செய்தேன் எனக் கூறியுள்ளார். இதில் தன் கணவர் லாரன்ஸ் தன்னுடைய அந்தரங்கப் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார்; மேலும் சினிமாவில் நடிக்கத் தடை விதித்தார்; அதனால்தான் பிரியமுடிவெடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading