Lead NewsLocal

சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை!

பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று காலை கையளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முற்கூட்டியே தெரிந்திருந்தும் அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிய அரசாங்கத்துக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading