Local

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்! – அமைச்சர் வஜிர தெரிவிப்பு

ஒன்பது மாகாணங்களுக்கும் எந்தவொரு காலதாமதமும் இன்றி, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல்களில் வெற்றிக்கொள்வதை நோக்காகக் கொண்டு, பொதுமக்களின் சொத்துகளை துஷ்பிரயோகம் செய்து, ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒவ்வொரு நாள்களில் தேர்தல் நடத்தப்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இம்முறை, இக்கலாசாரம் மாற்றப்பட்டே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் அதேவேளை, அரசால் முடிந்தால், ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலை​யும் அதே நாளிலேயே, வைக்கலாம் என்றும் ஏனென்றால், இந்த நடவடிக்கை காரணமாக, பாரிய அளவிலான நிதியை சேமிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading