Local

QR அமைப்பு முறை வெற்றி எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 962 நிலையங்கள் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருளை வழங்கும் முறையை பின்பற்றியுள்ளன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (29) அதிகளவான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, 657 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த முறைப்படி எரிபொருளை வழங்கியுள்ளன.

நேற்றிரவு 8.30 வரை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்காக 4,651,911 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் QR குறியீட்டின் படி எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading