Local

QR Code முறை வெற்றி எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

ஆரம்ப தொழில்நுட்ப சிக்கல்களுக்குப் பிறகு, QR Code அனுமதிப்பத்திர முறைமை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் வாரம் நாடளாவிய ரீதியாக இதன் சோதனைத் திட்டம் தொடரும். வாகனங்களின் இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோகமானது அடுத்த சில நாட்களில் எரிபொருள் வரிசைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் விநியோகமானது நாடு முழுவதும் துரிதப்படுத்தப்படும். QR Code முறைமைக்கு ஆதரவளித்த எரிபொருள் நிலைய உரிமையாளர்கள், ஏற்றுக்கொண்ட மற்றும் உதவிய பொதுமக்கள், படைகள் மற்றும் செயல்படுத்த உதவிய தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்தோடு, சில எரிபொருள் நிலையங்கள் இதனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை, சில தனிநபர்கள் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இதை செயல்படுத்த விரும்பவில்லை. எனினும் இது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading