Local

மஹிந்த அணி எம்.பி. ரஞ்சித் சொய்சா கைது! ஜனவரி 1 வரை விளக்கமறியல்!!

மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ரஞ்சித் டி சொய்சா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி கொடக்கவெல நகரில் வைத்து நபர் ஒருவரைத் தாக்கியமைத் தொடர்பில் கொடக்கவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைய ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானபோது, கைதுசெய்யபட்டு பெல்மடுல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading