Local

பல்கலை மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி! பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணியைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

கோட்டை ரயில் நிலைய முன்றலில் வைத்து பேரணி மீது பொலிஸார் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்.

மருதானை டெக்னிக்கல் சந்திப் பகுதியிலிருந்து மாணவர்கள் இன்று பிற்பகல் எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்தனர்.

பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த எதிர்ப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading