Local

ரணிலுக்கு ராகுல் வாழ்த்து!

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

“ஜனநாயக ரீதியில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் மீண்டும் பிரதமராகப் பணிகளைத் தொடர வாய்ப்புக் கிட்டியமைக்காக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அதனால் உருவான அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்ட சவால்கள் ஜனநாயகத்தை நேசிக்கும் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

எனினும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பு இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தும் நல்ல முன்மாதிரியையும் காண்பித்துள்ளன” – என்று ராகுல் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading