Lead NewsLocal

சம்பந்தனையும் சுமந்திரனையும் நேரில் அழைத்துப் பேசிய ரணில்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைத் தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இந்தச் சந்திப்பு கொழும்பில் கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென இடம்பெற்றுள்ளது.

சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-

“ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் சந்திப்பில் நாங்கள் கலந்துகொண்டோம். தொடர்ந்து பேச்சு நடத்தப்படும். தமிழ்க் கட்சிகளின் ஆதரவு தங்களுக்கு முக்கியம் என்று கூறினார். அவர்களது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுமாறு கூறினேன். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குவதாகத் தெரிவித்திருந்ததால் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் எமது முடிவை அறிவிப்போம் என்று பிரதமரிடம் கூறினேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading