Local

அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ரஞ்சன் ராமநாயக்க அதிரடி சவால்!

“நான் போதைப்பொருள் எதுவும் பாவிப்பதில்லை. அதனால் இன்று சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை செய்து காட்டினேன். வேறு அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வார்களா?”

– இவ்வாறு சவால் விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.

போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் குறித்து தெரிவித்த கருத்துக்காக இன்று விசாரணைக்குள்ளான அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மேற்படி சவாலையும் விடுத்துள்ளார்.

அனைத்து அரசியல்வாதிகளும் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனைகளைச் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொகெய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையிலான குழு இன்று கூடியது.

இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குழு முன்னிலையில் இன்று ஆஜராகி இருந்தார.

கொகெய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இது தொடர்பில் விசாரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியால் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading