Local

தீப்பற்றி எரிந்தது வீடு; ஆசிரியை கருகிப் பலி!

யக்கல, பிட்டுவகொட 5 ஆவது ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகத் தீக்கிரையாகியதில் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் 78 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

மின் ஒழுக்குக் காரணமாக இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் மின் ஒழுக்கு இருப்பதாக இதற்கு முன்னர் மின்சார சபைக்கு அறிவித்திருந்தபோதும் அது தொடர்பில் மின்சார சபையினர் கவனம் செலுத்தவில்லை என உயிரிழந்து பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading