Cinema

‘நட்பே துணை:’ 5 நாட்களில் ரூபா 14 கோடி வரை வசூல்!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் நட்பே துணை. இப்படம் இரசிகர்களிடம் செம்ம வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடை போடுகின்றது.

இந்நிலையில், இப்படம் தமிழகம் முழுவதும் 5 நாட்களில் ரூபா 14 கோடி வரை வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

எப்படியும் இப்படம் ரூபா 20 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஹிப்ஹாப் ஆதி நடித்த முதல் படமும் தமிழகத்தில் மிகப்பெரும் இலாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading