Local

ஹோட்டல் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு! – காலிமுகத்திடலில் சோகம்

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த ஹோட்டல் கட்டடத்தின் 18ஆவது மாடியில் பணிபுரியும்போதே குறித்த இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீகஹாதென்ன, ஊறல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புறக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading