Local

பாடசாலை மாணவியை பஸ்ஸுக்குள் வைத்து வன்புணர்ந்த நடத்துனர்! – ஆனமடுவவில் கொடூரம்

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை தனியார் பஸ் ஒன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பஸ்ஸின் நடத்துனர் ஆனமடுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவ – மஹஉஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி மேலதிக வகுப்புக்குச் செல்வதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை ஆனமடுவ நகருக்கு வந்துள்ளார்.

இதன்போது சந்தேகநபர் குறித்த மாணவியை ஏமாற்றி தனது பஸ்ஸுக்குள் அழைத்துச் சென்று அதற்குள் வைத்தே துஷ்பிரயோகம் செய்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோத்துக்கு உள்ளான மாணவி நடந்த சம்பவம் தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த மாணவியின் தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரான பஸ்ஸின் நடத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டமாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading