Lead NewsLocal

கோமாளித்தனமாகப் பகிஷ்கரிக்காமல் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்தே ஆகவேண்டும்! – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்து

“இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது. எனவே, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களித்தே ஆகவேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல்.

“இந்தத் தேர்தலைக் கோமாளித்தனமாக எவரும் பகிஷ்கரிக்கக் கூடாது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“காலதாமதமின்றி அனைவரும் நேரத்துக்கே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுள்ளார்.

“நீதி, உண்மை, நேர்மையின் வழியில் தமிழரின் தேசிய இலட்சியத்தை அடைய ஜனநாயக வழியில் நாம் போராடி வருகின்றோம். எமது ஜனநாயகப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட இருப்பதால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தீர்மானிக்கின்ற சக்திகளாக இருக்கின்றார்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading