Lead NewsLocal

இரு சிங்கங்களும் வாக்களிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தினர்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அம்பாந்தோட்டை, வீரவில, சுரனிமல ஆரம்பப் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச நுகேகொட விவேகராமய விகாரை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவை சிறி வித்தியாலோக விகாரை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்புப் பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மெதமுலான டி.ஏ. ராஜபக்ச வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் வாக்களித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading