Lead NewsLocal

வாக்களிப்பு வீதம் இம்முறை வடக்கு, கிழக்கில் அதிகரிப்பு!

இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில், வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே வாக்களிப்பு வீதம் கணிக்கப்படுகின்றது.

இதன்படி இம்முறை 80 சதவீத வாக்குப் பதிவு தேசிய மட்டத்தில் இடம்பெற்றுள்ளது எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும்விட இவ்வருடம் நடைபெற்ற தேர்தலில் 8 மாவட்டங்களிலும் வாக்களிப்பு வீதம் உயர்வடைந்துள்ளது.

மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம் வருமாறு:-

01) யாழ்ப்பாணம் மாவட்டம்

2019இல் – 66.58 %
2015இல் – 65.52 %

02) கிளிநொச்சி மாவட்டம்

2019இல் – 73.19 %
2015இல் – 70.58 %

03) முல்லைத்தீவு மாவட்டம்

2019இல் – 76.2 %
2015இல் – 71.87 %

04) வவுனியா மாவட்டம்

2019இல் – 75.12%
2015இல் – 68.78 %

05) மன்னார் மாவட்டம்

2019இல் – 71.7 %
2015இல் – 68.48 %

06) திருகோணமலை மாவட்டம்

2019இல் – 83 %
2015இல் – 76.76 %

07) மட்டக்களப்பு மாவட்டம்

2019இல் – 75 %
2015இல் – 70.97 %

08) அம்பாறை மாவட்டம்

2019இல் – 80 %
2015இல் – 77.39 %

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading