சஜித்தே வேட்பாளர்; ரணில் இறுதி முடிவு! – மாலை 3 மணிக்கு கூடுகின்றது ஐ.தே.கவின் மத்திய செயற்குழு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை இன்று பிற்பகல் நடைபெறும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரேரிக்க பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று முற்பகல் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ரணில் நடத்திய சந்திப்பில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த வேட்பாளர் நியமனம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மாலை 5 மணிக்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திலும் முன்வைக்கப்படும்.


