FeaturesLead NewsLocalNorth

நல்லூரில் பேரெழுச்சியுடன் திரண்டு திலீபனுக்கு தமிழ் உறவுகள் அஞ்சலி!

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக ஈழத் தமிழர்களை வேரறுக்கும் படையாக மாறி, வயது, பால் வேறுபாடின்றி தேசத்து உறவுகளை வேட்டையாடி – சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் தரணியெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றன.

அந்தவகையில் பிரதான நிகழ்வுகள் யாழ். நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்திலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியிலும் இடம்பெற்றன. அந்த நிகழ்வுகளில் தமிழ் உறவுகள் பேரேழுச்சியுடன் திரண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading