FeaturesLead NewsLocal

மும்மொழிகளிலும் வெளிவந்தது சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம்! – புதிய அரசமைப்பு உள்ளிட்ட பல்துறைகளில் வாக்குறுதிகள்

 

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் வெளியிடப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பித்து அதனை வெளியிட்டார்.

மகாநாயக்க தேரர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கையளிக்கும் நிகழ்வில் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

தேர்தல் விஞ்ஞாபனம் மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, கண்டி குயீன்ஸ் விடுதியில் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்துறைகளையும் உள்ளடக்கும் வகையில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், போதை ஒழிப்பு, இன ஐக்கியம் , புதிய அரசமைப்பு உள்ளிட்டவை தொடர்பிலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மும்மொழிகளிலும் வெளிவந்த சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. https://t.co/67mexf3BEp?amp=1

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading