Local

‘மன்னா’ கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுப் படுகொலை!

நவகமுவ பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நவகமுவ, கொடெல்லவத்த பகுதியில் உள்ள இறப்பர் தோட்டத்தில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

37 வயதுடைய சமில பிரசாத் கருணாரத்ன என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி மகோல பகுதியில் வைத்து தனுஷ்க சஞ்சீவ எனும் ´மன்னா´ கொலை ​செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் எனக் கூறப்படுகின்றது.

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து ரி – 56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களும் ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading