Local

சினமன் ஹோட்டல் தாக்குதல் குண்டுதாரி தொழிற்சாலையின் உரிமையாளர்!

கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர், அவிசாவளை – வெல்லம்பிட்டி வீதியிலுள்ள நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் 9 ஊழியர்கள், வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றுக் காலை உணவு வேளையில் வரிசையில் நின்றபோதே, குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார் என்று அந்தக் ஹோட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

“கோப்பையுடன் வந்த அந்த நபருக்கு உணவு பரிமாறப்படும்போதே அந்த நபர் வெடித்துச் சிதறினார். அந்த நபரின் உடல் துண்டு துண்டாகக் கிடந்த நிலையில், பொலிஸார் எடுத்துச் சென்றனர்” என்று குறித்த ஹோட்டல் அதிகாரி ஏ.எவ்.பியிடம் கூறியிருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading