Local

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – வாள்களை ஒப்படைக்க மேலும் அவகாசம்

சமூக ஊடகங்கள் மீது நேற்று இரவு கொண்டு வரப்பட்ட தற்காலிக தடை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக   அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரங்களை அடுத்து சமூக ஊடகங்களான முகநூல், வட்ஸ்அப், வைபர், இன்ராகிராம் உள்ளிட்டவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

எனினும், நீர்கொழும்பில் இன்று காலை ஊரடங்கு நீக்கப்பட்டு, அங்கு சுமுக நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

கால எல்லை நீடிப்பு

அதேவேளை,சட்ட விரோத வாள் கத்தி உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக 48 மணித்தியாலங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ஒப்படைப்பதற்கான கால எல்லை இன்று 12 மணியுடன் நிறைவடைய இருந்தது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவ்வாறான சட்ட விரோத ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதன் காரணமாக சட்ட விரோதமான ஆயுதங்களை கொண்டிருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்டைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை வலியுறுத்திருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading