Lead NewsLocal

பறிக்கப்பட்டது எஸ்.பியின் பதவி! – சு.கவின் புதிய பொருளாளராக லசந்த அழகியவண்ண நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை கூடிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட்டு வந்த இவர், அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்தநிலையிலேயே, இவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading