Lead NewsLocal

மைத்திரி ஆணையிட்டால் நானும் களமிறங்கத் தயார்! – குமார வெல்கம அதிரடி

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நானும் தயாராகவே இருக்கின்றேன்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் அரச தலைவர் வேட்பாளர்களை என்னால் தோற்கடிக்க முடியும்” எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனித்து நின்று – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன் கருதி சுயமாக முடிவெடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading