Lead NewsLocal

சம்பந்தனை முதலில் சந்தித்த வடக்கின் புதிய ஆளுநர் சுரேன்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading