LocalNorth

மூன்று இளைஞர்களை மோதி சாகடித்தது இராணுவ வாகனம்! – இயக்கச்சியில் இன்று மாலை துயரச் சம்பவம்

வீதியில் பயணித்த ஓட்டோவுடன் இராணுவத்தின் வாகனம் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இளைஞர்கள் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றது.

ஓட்டோவில் பயணித்த பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கரந்தாயைச் சேர்ந்த குகன் மற்றும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் ஆகிய மூவருமே விபத்தில் உயிரிழந்தனர்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[ads2]

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading