Local

பாதி அமைச்சுக்காக ‘பல்டி’ அடித்த சுரேஷ்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்படும் என உறுதி வழங்கியிருந்த வசந்த சேனநாயக்க, வடிவேல் சுரேஷ் ஆகியோர் இறுதிநேரத்தில் ரணிலின் காலைவாரியுள்ளனர்.

ஜனாதிபதி செயலத்தில் இன்றிரவு நடைபெற்ற மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் வசந்த சேனநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும், வடிவேல் சுரேஷுக்கு பாதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

வசந்த சேனநாயக்க சுற்றுலாத்துறை மற்றும் வனவாழ் உயிரினங்கள் அமைச்சராகவும், வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மதில்மேல் பூனையாக இருந்த விஜயதாஸ ராஜபக்ஷவும் இறுதி நேரத்தில் மஹிந்த பக்கம் தாவியுள்ளார். அவருக்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே மஹிந்த பக்கம் தாவியிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவுக்கு சுற்றுலாத்துறை மற்றும் வனவாழ் உயிரினங்கள் பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading