Local

உயர்தர மாணவர்களுக்கு ‘டெப்’ – அமைச்சரவை அனுமதி!

உயர்தர மாணவர்களுக்கு, டெப் கணிணி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி,  1AB பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு  அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நவீன கல்வியில் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை கல்வியை உருவாக்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் டெப் கணிணி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார்.

1 AB பாடசாலைகளில் உள்ள உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து கண்காணிப்பு செயற்திட்டம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படுவதுடன்

அதன்பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் டெப் கணிணி வழங்கல் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

டெப் கணிணி வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தபோகும் முறைமையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,

அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்வைக்கவுள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading