Local

‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வை சுற்றிவளைத்தனர் பொலிஸார்! – 5 பெண்கள் உட்பட 11 பேர் கைது

தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகம் (‘பேஸ்புக்’) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின்போது கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் ஒரு குழு கைதுசெய்யப்பட்டுள்ளது.

5 பெண்கள் உட்பட 11 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்தக் கைது இடம்பெற்றது எனத் தங்காலைப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 06 பேர் கடவத்தை, தங்காலை, ஹிங்குராங்கொட, றாகம மற்றும் பரகடுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 21 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட வயதினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் ஹித்தெட்டிய, கடுவலை, மாத்தறை, கிரிவடுல்ல மற்றும் கெக்கிராவ பிரதேசங்களைச் சேர்ந்த 17 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்வர்கள் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading