புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனவரி மாத முதல் வாரத்தில்!
புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதும், கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்லவுள்ளதால், இந்த வாரமும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது.
இதனால் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் 2019 ஜனவரி முதல் வாரமே இடம்பெறும்.
வெளிநாடு செல்வதற்கு முன்னதாக, நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த ஜனாதிபதி யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். எனினும் அமைச்சர்கள் தயாராகாததால் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை.
எதிர்வரும், ஜனவரி முதல் வாரத்தில் நடக்கும் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்படும்” – என்றார்.
