Local

முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்ற வேண்டும்! – இராணுவத் தளபதி அதிரடிக் கருத்து

முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்றிவிட்டு அந்த அமைச்சுக்கு வேறு படித்த அறிவுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

“இந்த அமைச்சு முஸ்லிம் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என்று இல்லை. வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்கப்படலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தொடர்பில் எமக்கு அடிக்கடி கேட்க முடிகின்றது. தற்போதைய முஸ்லிம் விவகார அமைச்சர் இவை தொடர்பில் தேடிப் பார்ப்பதில்லை.

நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் சுயாதீனத் தன்மையொன்று அவசியம். இதன்போதுதான், பிரச்சினை தீரும்.

முஸ்லிம் விவகார அமைச்சு செய்ய வேண்டிய கடமைகளை இராணுவமும், பொலிஸும் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த அமைச்சை மாற்ற வேண்டியுள்ளது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading