Cinema

THE ROCK பிரபல நடிகர் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுக்கு கொரோனா!

உலக அளவில் பல லட்சம் மக்கள் பரவி வரும் கொடிய கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவின் வுஹான் நகரை பிறப்பிடமாக கொண்ட இது இன்று பூமி பந்தில் உள்ள 95 சதவிகித நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் The Rock என்ற ரசிகர்கள் அன்போடு அழைக்கும் பிரபல நடிகர் டுவைன் ஜான்சன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். ஜான்சன் 1972ம் ஆண்டு கலிபோர்னியா நகரில் பிறந்தவர்.
‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு Fast அண்ட் Furious, ஜுமான்ஜி, Rampage போன்ற பல படங்கள் இவருடைய அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காக கலைக்கட்டியது. தற்போது உலக அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர் இவர் தான் என்பது ஒரு தகவல். இந்நிலையில் கொரோனா தொற்று தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் தங்கள் அனைவரும் நலமுடன் இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading