LocalNorth

ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்! – முல்லைத்தீவில் வெயிலின் கொடூரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி கையில் எடுத்து வந்தவேளை மயக்கம் அடைந்து நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை 5 மணிக்கே இவர் உயிரிழந்திருந்தமை அயலவர்களால் கண்டறியப்பட்டுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவரது உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading