Local

கஞ்சிப்பான இம்ரான் வழங்கும் முக்கிய தகவல்களை இருட்டடிக்க முயற்சி!

பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழுத் தலைவருமான மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட அவரின் நெருங்கிய சகாவான கஞ்சிப்பான இம்ரானிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் வெளியாகும் முக்கிய தகவல்களை வெளியிட வேண்டாம் என உயர்மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்று பொலிஸ் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதுஷ் டுபாயில் இருக்கும்போது சில அரசியல்வாதிகள் டுபாய் சென்று அவருடன் விருந்துபசாரங்களிலும் கலந்துகொண்டுள்ளமை இம்ரானிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மதுஷுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் பலர் குறித்தும் இம்ரானிடமிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

உயர்மட்ட அழுத்தங்களினால், எதிர்காலத்தில் மாக்கந்துர மதுஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள், இருட்டடிப்புச் செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தக் குற்றச் செயல்களுடன் உள்ளவர்களை சிறைப்படுத்துவதுடன் மாத்திரம் விசாரணைகள் நிறைவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading