Lead NewsLocal

வாகன விபத்துகளில் 42 பேர் பரிதாபச் சாவு!

நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 13ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை நாடளாவிய ரீதியில் 31 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 42 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், பலர் காயமடைந்துள்ளனர்.

வாகனச் சாரதிகளின் கவனயீனத்தாலேயே இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading