Local

மதுஷின் உறவினர் உட்பட 6 பேர் இன்று நாடு கடத்தல்!

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட அவரின் உறவினர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் இன்று (17ஆம் திகதி) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் இன்று அதிகாலை 4.50 மணியளவில் டுபாயிலிருந்து நாட்டை வந்தடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த சந்தேகநபர்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.

இதேவேளை, மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட 31 சந்தேகநபர்களில் 21 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading