Local

மகளின் கொடூர தாக்குதலில் தாய் பலி! தந்தை படுகாயம்!!

கஹவத்தை, மடலகம பிரதேசத்தில் யுவதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் அவரது தாய் உயிரிழந்துள்ளார். அத்துடன், தந்தை படுகாயமடைந்துள்ளார்.

பொல்லால் மகள் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கஹவத்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி மனநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் கூறினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading