Cinema

ரஜினிக்கு வில்லியாக வருகிறார் நயன்தாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிரபல நடிகை நயன்தாரா, ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல், வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகின்றார்.

தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது.

இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

ஆனால், அவர் இப்படத்தில் ரஜினியின் ஜோடி இல்லை, படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்றும் தகவல் வருகிறது.

தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும், நயன்தாரா இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்தப் படத்துக்காகத் தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

ஏற்கனவே சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி – நயன்தாரா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading