Local

பூச்சாடியால் தந்தையைத் தாக்கிப் படுகொலைசெய்த மகன்!

தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையைக் கொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூச்சாடி ஒன்றினால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் சம்பந்தப்பட்ட மகன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைதுசெய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading