World

ஜமால் கொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! – அடித்துக் கூறுகின்றார் ட்ரம்ப்

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி குறித்துசவூதி கூறிய பதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை மறைக்க கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“இந்தக் கொலையைத் திட்டமிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்தக் கொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் முக்கிய கூட்டாளியான அமெரிக்கா, சவூதிக்கு அதிக அழுத்தங்கள் தரவேண்டும் என்று கூறப்பட்டது.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, “இந்தக் கொலை மிக மோசமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை மோசமாக மறைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கொலை செய்ய யோசித்தவர்கள், பெரும் சிக்கலில் உள்ளனர். நிச்சயம் அவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading