Local

ஐ.எஸ். தாக்குதலால் சுற்றுலாத்துறை 50 வீதத்தால் வீழ்ச்சி

கொழும்பிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்திற்குள் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக, சபையின் தலைவர் கிஷூ கோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

” கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களினால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 2.33 மில்லியன் மக்கள் நாட்டிற்கு வருகைதந்ததுடன், இந்த வருடத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்தோம்.

எனினும், தற்போதையை நிலையில் அந்த இலக்கை அடைவதற்கு இயலாவிட்டாலும், அதனை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading