Local

4 கோடி ரூபா பெறுமதியான 400 கிலோ ‘கேரளா கஞ்சா’வுடன் இருவர் சிக்கினர்!

400 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை வான் ஒன்றில் இவை எடுத்துச் செல்லப்படும்போது திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

அவற்றின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா (4 கோடி ரூபா) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading