LocalNorth

72 கிலோ ‘கேரளக் கஞ்சா’வுடன் யாழில் இருவர் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் கைது இடம்பெற்றுள்ளது.

விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களான தினேஷ், நிரோஷன், றெஜி ஆகியோர் குறித்த கஞ்சாக் கடத்தலை முறியடித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பின்தொடர்ந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் குறித்த கடத்தல்காரர்களை தென்மராட்சி எல்லைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

கையகப்படுத்திய கஞ்சாவுடன கைதுசெய்த இருவரும் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading